சிறுமி மீது பாய்ந்த நாய்.. கடி வாங்கிய பூனை.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பித்த குழந்தை..

Update: 2024-05-23 02:19 GMT

சென்னையில் பெட்டிக்கடைக்குள் இருந்த சிறுமியை வளர்ப்பு நாய் ஒன்று கடிக்க பாய்ந்த நிலையில், நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கருணாகரன் என்பவர் கடைக்குள் இருந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரின் வளர்ப்பு நாய் கடிக்க பாய்ந்துள்ளது. அப்போது சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து அவர் அருகே இருந்த பூனையை கடித்துவிட்டு நாய் தப்பியோடியுள்ளது.

இந்த நிலையில் நாயின் உரிமையாளர்களான ஜெயா மற்றும் அவரது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கருணாகரன்புகார் அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்