வெடித்து கொட்டும் கோடை மழை.. இந்த 7 மாவட்ட மக்களே ரெடியா இருங்க..

Update: 2024-05-09 05:41 GMT

சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அரும்பாக்கம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட ஒருசில இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது.

கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று அதிகாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. இந்தநிலையில் சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இதனிடையே, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்