எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலியான விவகாரம்..! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Update: 2024-05-27 14:16 GMT

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் திடீரென உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 23 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் மருத்துவமனையிடம், சம்பவம் குறித்து விளக்கம் கேட்காமல் பதிவை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி அந்த உத்தரவை ரத்து செய்து, மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்