திருமணம் செய்ய மறுத்த பெண்.. இளைஞர் செய்த கேவலமான செயல்.. அதிர்ந்து போன சென்னை.. அச்சத்தில் பெண்

Update: 2024-05-25 13:08 GMT

இளம்பெண்ணின் அந்தரங்க படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த சுடரொளி, சென்னையில் பணியாற்றியபோது, உடன் பணிபுரிந்த இளம்பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, அந்த பெண்ணின் அனுமதியின்றி அவரை படம் எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் திருமணத்துக்கு மறுத்ததால் கோபமடைந்த சுடரொளி, அவருடைய அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து இளம்பெண், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் சுடரொளியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்