"போதையில் அட்ராசிட்டி..?" சிறுவனின் மண்டையை உடைத்த போலீஸ்.. கோவத்தில் கொந்தளித்த உறவினர்கள்

Update: 2024-05-23 16:20 GMT

சென்னை செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முரசொலி மாறன் மேம்பாலம் அருகே, பயிற்சியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் அனுஜன் மற்றும் சாதாரண உடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் ஆகிய இருவரும் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த சிறார்கள் இருவர், போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதையடுத்து, காவலர் சந்தோஷ் லத்தியை வீசியதில், இரு சக்கர வாகனத்தில் பினனால் அமர்ந்திருந்த 11 வயது சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அந்த சிறுவன் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவனின் உறவினர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் சந்தோஷ், மதுபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்