`ஜோக்' என நினைத்தவர்களை விட்டு விளாசிய RTO... ரெய்டில் அரங்கேறிய அதிரடி

Update: 2024-05-23 16:38 GMT

சென்னை குன்றத்தூரில் 28 தனியார் பள்ளிகளின் 329 பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. அவசரகால வழி, மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு கருவி, படிகட்டுகள் உள்ளிடவைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் இருக்கைகள் தூசிகளாக இருந்த‌தை பார்த்த ஆர்டிஓ, பேருந்து உள்ளே வந்து பார்த்த‌தும் ஆஸ்துமா சரியாகிவிட்டதாகவும், நாலு ஆஸ்துமா நோயாளி அமர வைத்தால் அவர்களுக்கும் சரியாகிவிடும் என கிண்டலாக கூறினார். குழந்தைகள் அமரும் இருக்கைகளை சுத்தமாக வைத்திருக்குமாறு கண்டிப்புடன் கூறிய ஆர்டிஓ. குறைகள் உள்ள வாகனங்களை சரிசெய்த பிறகு இயக்குமாறு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்