சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு.. பஸ்ஸுக்குள் ஏறி டிரைவரை மிதித்த வேறு பஸ் கண்டக்டர்- வைரலாகும் வீடியோ

Update: 2024-02-05 03:35 GMT

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுநருக்கும், முன்னாள் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கும் வழி விடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தாம்பரம் பேருந்திற்குள் ஏறி ஓட்டுநரும், நடத்துநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென பேருந்தின் கதவுகளை அடைத்து விட்டு ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தகராறு முற்றி கைகலப்பான நிலையில், ஓட்டுநர்களும், நடத்துநரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தாம்பரம் பேருந்தின் நடத்துனர் செல்போனில் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்