தமிழகத்தையே பரபரப்பாக்கிய போலீஸ்... பஸ் டிக்கெட் எடுத்தாரா? இல்லையா? - அவரே சொன்ன புதிய தகவல்

Update: 2024-05-25 03:26 GMT

அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து தான் பயணம் மேற்கொண்டதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும், சர்ச்சைக்குள்ளான காவலர் ஆறுமுக பாண்டி தெரிவித்துள்ளார். விசாரணையின் போது மயங்கி விழுந்த‌தால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் ஆறுமுக பாண்டி, சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காவல்துறை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தவறாக வீடியோ வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்