வெளியில் சென்று வீடு திரும்பிய பெண்.. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி - கண்ணீர் மல்க கதறும் தாய்

Update: 2024-05-26 11:32 GMT

டிபி சத்திரம் ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் பவானி. மகனுடன் வசித்து வந்த இவர், சம்பவத்தன்று மாவு அரைப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நிலையில், திரும்பி வரும்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே கதவை திறந்து பார்த்த பவானி, பீரோவில் இருந்த 35 சவரன் நகைகளும் மாயமானதை கண்டு திடுக்கிட்ட நிலையில், போலீசில் புகாரளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து வரும் நிலையில், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்