"கையில் ஆபரேஷன்...ஹார்ட் அட்டாக் பலி..உடலை வைத்து பேரம் பேசும் பிரபல சென்னை தனியார் ஹாஸ்பிடல்"

Update: 2024-05-27 07:29 GMT

சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் விபத்தில் சிக்கிய நிலையில், படுகாயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், கையை அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால், பாஸ்கரின் உறவினர்கள் அவரை பாரிமுனையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த பாஸ்கருக்கு நுரையீரலில் பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், 2 லட்சம் ரூபாய் செலுத்தி அவரது உடலை பெற்றுச் செல்ல வேண்டுமெனவும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், உரிய பதிலளிக்கும் வரை உடலை பெற்றுச் செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்