நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில்10 லட்சம் ரூபாய்-க்கு மேல் சொத்து வரி கட்டாத 3 திருமண மண்டபங்கள், 6 ஹோட்டல்கள், 1 திரையரங்கம், 1 மருத்துவமனை, 4 வணிக வளாகங்கள் மற்றும் 107 வணிக அங்காடிகள் சீல் வைக்கப்பட்டன. 63 பெரிய நிறுவனங்களின் கட்டடங்களுக்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்பட்டும் நிலுவை வரியினை உடனடியாக செலுத்தும்படி எச்சரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் கடந்த 15 நாட்களின் 40 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் 220 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.