கணவனை கொன்றவரை பழி தீர்க்க மனைவி எடுத்த விபரீத முடிவு - கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு

Update: 2024-04-24 05:19 GMT

சென்னையில், கணவர் கொலைக்கு காரணமானவரை கூலிப்படை ஏவி பழிதீர்த்த வழக்கில், மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கவிதா என்பவரது கணவர் ஏழுமலை, கடந்த 2014ம் ஆண்டில், வேளச்சேரி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழியாக, சவுகார் பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கூலிப்படையினர் மூலம் 2015ம் ஆண்டு எழும்பூர் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவிதா, அவரது சகோதரர் டில்லி பாபு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த அல்லிகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், கவிதா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணையின் போது டில்லி பாபு உயிரிழந்ததாலும், மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதாலும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்