மகனை தேடி அலைந்த தாய், தந்தை... கிரவுண்டில் கிடந்த சடலம்... பெற்றோர் திருமண நாளில் விழுந்த பேரிடி..

Update: 2024-05-18 10:37 GMT

பேரமனூர் பகுதியைச் சேர்ந்த மனோவை காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இளைஞரை போலீசார் தேடி வந்த நிலையில், மறைமலைநகர் திடலில் சடலம் கிடப்பதாக தகவல் வந்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், அந்த சடலம் காணாமல் போன மனோ என்பதை உறுதி செய்தனர். மகனின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுத நிகழ்வு, பார்ப்பவர்களின் மனதை நொறுங்கச் செய்தது. பெற்றோர் திருமண நாளில், நண்பர்களுக்கு விருந்து அளித்து விட்டு வருவதாக சென்ற மகன் சடலமாக திரும்பிய சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்