ட்ரை சைக்கிள் மீது மோதிய சொகுசு கார் - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி - விளாத்திகுளம் அருகே பயங்கரம்

Update: 2024-05-26 11:15 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தங்கம்மா, மாரியம்மாள், 7 வயது சிறுவன், சிலம்பரசன் ஆகிய 4 பேரும் 3 சக்கர ட்ரை சைக்கிளில் பழைய பேப்பர், பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பழைய பேப்பர், பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து கொண்டு தங்கச்சிமடம் செல்லும்பொழுது, கீழ சண்முகபுரம் கிராமத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில், ட்ரை சைக்கிளில் இருந்த தங்கம்மா, மாரியம்மா, சதீஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிலம்பரசன் படுகாயம் அடைந்தார். அதேபோல் சொகுசு காரில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்