தமிழகத்தையே பரபரப்பாக்கிய விவகாரம் - பாஜக பொருளாளருக்கு சம்மன்?

Update: 2024-05-08 06:24 GMT

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்

பாஜக மாநில பொருளாளர் சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு

ஓரிரு நாட்களில் சம்மன் அனுப்ப வாய்ப்பு

4 கோடி ரூபாய் பண விவகாரத்தில், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் முருகன், முருகனின் பணியாளர்கள் ஜெய்சங்கர் ஆசைத்தம்பி ஆகியோரிடம் சென்னை சி பி சிஐ டி அலுவலகத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாடு பாஜக பொருளாதார பிரிவு தலைவர் கோவர்த்தன் வீடு கடைகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில பொருளாளர் சேகர் மற்றும் முரளி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்..

இது தொடர்பாக அவர்களை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக நாளை அல்லது நாளை மறுநாள் சம்மன் அனுப்பி அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் சிபிசிடிஐ போலீசார் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்