பாஜக அமைச்சர்... திமுக அமைச்சர்.. பாய்ந்த வழக்கு.. பரபரப்பாகும் தேர்தல் களம் | BJP | DMK

Update: 2024-04-16 17:10 GMT

நாடு முழுவதும் தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கொடுத்த 200 புகார் மனுக்களில் 169 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திமுகவின் புகாரின் பேரில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு குறித்து சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டை வைத்த பாஜக அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துகளுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட 2 லட்சத்து 68 ஆயிரத்து 80 புகார்களில் 92 சதவீத வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்