பைக்கில் பறந்தபடி அநாகரீகமாக நடந்துகொண்ட காதல் பறவைகள்.. றெக்கையை உடைத்து கூண்டில் அடைத்த போலீஸ்

Update: 2024-05-24 09:34 GMT

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்தபடி காதல் என்ற பெயரில் அநாகரீகமாக நடந்து கொண்ட காதல் பறவைகள் போலீசாரிடம் பிடிபட்டு கூண்டில் அடைக்கப்பட்டனர்... பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது காதலியை அமரவைத்தபடி காதலன் வண்டி ஓட்டிய நிலையில், இருவரும் பைக் முன்விளக்கை விட கண்ணைக் கூசும் வகையில் மிக மோசமாக நடந்து கொண்டனர்... இந்த வீடியோ இணையத்தில் பரவவே... பைக்கை ஓட்டிச் சென்ற முகமது வாசிமையும், அவரது காதலியையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்