பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமின்..? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

Update: 2023-11-22 17:40 GMT

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது. வரிச்சியூர் செல்வத்தின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்த போது, புவனேஸ்வரன் என்பவர் காணாமல் போய்விட்டார் என்றுதான் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், கொலை வழக்காக மாற்றி கைது செய்துள்ளதாகவும் மனுதார‌ர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஒருவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை என்ற நீதிபதி, உரிய ஆவணங்கள் தாக்கல் செய்ய தவறியதால், மனுதார‌ருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்