சென்னையில் குறைந்தது... பெரு மூச்சு விட்ட மக்கள் | Chennai | Air Pollution

Update: 2023-11-14 07:17 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் பட்டாசு வெடித்ததில் காற்று மாசுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது அதன் தாக்கம் குறைந்து வருகிறது...சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று தரக்குறியீடு 300-க்கும் மேல் பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது, இன்று காற்றின் தரம் உயர்ந்து, மாசுபாடு குறைந்துள்ளது. நேற்று சென்னை முழுவதும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாசுபாடு குறைந்ததால் மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், மணலி பகுதியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுவதால் அப்பகுதிக்கு மட்டும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மணலியில் காற்றின் தரக்குறியீடு 204-ஆகவும், அரும்பாக்கத்தில் 120-ஆகவும், ராயபுரத்தில் 150-ஆகவும், ஆலந்தூரில் 141-ஆகவும் பதிவாகியுள்ளது. சென்னையை தவிர கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக்குறியீடு 216-ஆகவும், கடலூரில் 141-ஆகவும், புதுச்சேரியில் 148-ஆகவும் பதிவாகியுள்ளது. இதனை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்