நடுரோட்டில் அரசு பேருந்து கண்டக்டர்களிடையே திடீர் தகராறு.. பரபரப்பான திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட்

Update: 2023-07-27 02:34 GMT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பேருந்து நிலையம் அருகே, இரண்டு அரசு பேருந்து நடத்துநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. காஞ்சிபுரத்திற்கு செல்லும் இரண்டு அரசு பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் ஒரு பேருந்தில் பயணிகள் கூட்டம் ஏறுவது தொடர்பாக, இரண்டு நடத்துநர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்