பெரியார் பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை - உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.;

Update: 2022-04-03 12:29 GMT
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம்குமார் என்பவர் கடந்த ஓராண்டு காலமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதுடன், ஜாதி பெயரை சொல்லி திட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள உதவி பேராசிரியர் பிரேம் குமாரை தேடி போலீசார் வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்