நகைக்கடன் தள்ளுபடி... ஈ.பி.எஸ் கேள்வி - அமைச்சரின் விளக்கம்

தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நகைக்கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பினார்.;

Update: 2022-01-07 03:13 GMT
தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நகைக்கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பினார். 
இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்ததாகவும், அதன்படி, 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளதாக கூறினார். 20 லட்சம் பேர், 40 கிராமுக்கு மேல் வைத்தவர்கள் என்றும், அவர்களுக்கு தள்ளுபடி இல்லை என்றும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்