Thoothukudi | தூத்துக்குடியில் பயங்கரம்.. பாட்டியை துடிதுடிக்க வெட்டி கொன்ற பேரன்

Update: 2025-12-24 09:50 GMT

தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தர மறுத்த பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது பாட்டியிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பாட்டி பணம் தர மறுக்கவே, அவரை பேரன் அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த பாட்டி கருப்பாயம்மாள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேரன் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்