உதகையில் கடும் உறை பனி - காமராஜர் சாகர் அணை பகுதிக்கு செல்ல தடை
நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் உறை பனி நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி காமராஜர் சாகர் அணையை ஒட்டிய சமவெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தலைக்குந்தா பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும், உதகை நகர பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது