30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்

Update: 2021-11-30 12:14 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர். வேந்தோணி கால்வாயில் அதிகளவில் செல்லும் தண்ணீர் இப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்காளாகி உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சாலை, குடிநீர், மின்சார வசதி இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். குடியிருப்புகளை சுற்றி விஷ ஜந்துக்கள் சுற்றுவதால் மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தங்களுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்