25 வயது இளைஞரை தீர்த்துக்கட்டிய மைத்துனர் - மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்

நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே இளைஞர் ஒருவரை, அவரது அக்காள் கணவரே சித்திரவதை செய்து துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-11-28 08:58 GMT
நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே இளைஞர் ஒருவரை, அவரது அக்காள் கணவரே சித்திரவதை செய்து துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிட்டாதார் குளத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று தனது அக்காள் மரிய ஷோபாவிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக தெரிகிறது. பணம் தர மறுக்கவே, அவரது சேலையை டேவிட் ராஜா எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மரிய ஷோபாவின் கணவர் பிரிட்டோ, நேராக டேவிட் ராஜாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், நீ இருந்தால் தானே எங்களுக்கு பிரச்சனை எனக்கூறி, டேவிட் ராஜாவை மரத்தில் கட்டி வைத்து, அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி ஷாக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஷாக் கொடுத்தும் டேவிட் ராஜா, உயிரிழக்காததால், அருகிலிருந்த கேபிள் வயரை எடுத்து கழுத்தை இறுக்கி, டேவிட் ராஜாவை கொலை செய்துள்ளார் பிரிட்டோ. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார், விசாரணை செய்து, பிரிட்டோவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்