கடலூர் எம்.பி.ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - 3வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-27 10:58 GMT
கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் எம்.பி. ரமேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்தார் எம்.பி. ரமேஷ். சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று மீண்டும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 3வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். இதன்படி அவருக்கு நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் கடலூர் கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்