இ- முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் வலைதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வலைதளங்கள் மற்றும் மென்பொருட்களைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-22 07:47 GMT
200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சிகளை மீளாய்வு செய்து கண்காணிக்க  "இ-முன்னேற்றம்" என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த குழுமங்கள் நேரடியாக இணைந்து கொள்கைகளை உருவாக்கிட, "தகவல் தொழில்நுட்ப நண்பன்" என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், "கணினி விசைப்பலகை" மற்றும் "தமிழிணையம்-ஒருங்குறி மாற்றி" ஆகிய இரு தமிழ் மென்பொருள்களும் புதிய வசதிகளுடன், "கீழடி- தமிழிணைய விசைப்பலகை" மற்றும் "தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைதளங்கள் மற்றும் இரு தமிழ் மென்பொருள்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்