"நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை" - தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு தகவல்

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது..

Update: 2021-10-22 07:23 GMT
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தடுப்பூசியே மரணத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. முன்னதாக விவேக் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு பிறகு இந்த அறிக்கையை தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என்றும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பே மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்