கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-10-19 06:45 GMT
நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அலகு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நெம்மேலி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ஆயிரத்து 260 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2ஆம் அலகின் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு அரசு துறை அதிகாரிகள் பலர் ஆய்வின் போது உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்