முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக, லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2021-09-28 13:36 GMT
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் 10 பேர் நடத்தி வந்த 7 நிறுவனங்கள் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி, கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், நிறுவனங்கள், சென்னையில் உள்ள வீடு என 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் பணம், பல சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 30-ம் தேதி  லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்