'திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட மசோதா' - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

'திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட மசோதா' அடுத்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் சட்டமாக நிறைவேற்றப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-28 11:46 GMT
சென்னை அயனாவரம் ரவுடி ஜோசப் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, தொடர்ந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட மசோதா',  தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த மசோதா, சட்டமாக இயற்றப்பட்டால்  ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்