அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி- தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி

அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

Update: 2021-09-19 02:11 GMT
நாமக்கல் மாவட்ட ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியில் இருந்து  கடந்த அதிமுக ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரை செல்வன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் முத்துகுமார் ஆஜராகி, அரசின் திட்டங்களை அமல்படுத்தும்போது அனைத்து தொகுதிகளுக்கும் சமமான நிதி பங்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதன்மூலம் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக குறை இருக்காது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து தொகுதிகளிலும் மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டகூடாது என உத்தரவிட்டு   வழக்கு விசரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்