தலை துண்டித்து இளைஞர் படுகொலை - அடுத்தடுத்து கொலையால் அதிர்ச்சியில் மக்கள்

நெல்லையில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...;

Update: 2021-09-15 07:56 GMT
நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாய பணிகளுக்கு இயந்திரம் அனுப்பும் பணி செய்து வந்தார். வழக்கமாக அதிகாலையில் விவசாய பணிகளை செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு செல்வது இவரின் வழக்கம். அதன்படி வழக்கமாக செல்லும் கோபால சமுத்திரம் குளக்கரை வழியாக மாரியப்பன் சென்றபோது மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதில் தலை துண்டான நிலையில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் தலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இருவர்  தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்