திருமணம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப்பின் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மீண்டும் சமூக ஊடக பக்கம் திரும்பியுள்ளார்.
கடந்த மாதம் 23ம் தேதி ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. ஸ்மிருதியின் தந்தை திடீர் உடல்நலக்குறைவே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மந்தனாவின் விரலில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லாதது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.