Telangana | மளமளவென பற்றி எரியும் 4 மாடி கட்டடம்.. உள்ளேயே சிக்கித் தவிக்கும் உயிர்கள்
Telangana Building Fire | மளமளவென பற்றி எரியும் 4 மாடி கட்டடம்.. உள்ளேயே சிக்கித் தவிக்கும் உயிர்கள் - அதிர்ச்சி காட்சி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நம்பள்ளியில் உள்ள பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது... 4 மாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டடத்திற்குள் இரண்டு சிறுவர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ கொழுந்துவிட்டு எரிவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.