Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06.12.2025) | 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-12-06 13:58 GMT

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும்19ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...பிப்ரவரி வரை 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது...

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது..நாகையில் இருந்து தாம்பரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து எழும்பூருக்கும் நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களின் டிக்கெட் கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது...நாளை இரவு 8 மணிக்குள் பணத்தை திருப்பி வழங்கவும், மறு அட்டவணை கட்டணங்களையும் வசூலிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் எர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது...கோவைக்கு 57 ஆயிரம் ரூபாயாகவும், பெங்களூருவுக்கு 18 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது...

நாடு முழுவதும் விமான கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், கட்டண உச்சவரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..அதன்படி 500 கி.மீ தூரம் வரை கொண்ட விமான பயணத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

தங்கம் விலை சவரன் 320 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு சவரன் 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக 99.86% கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது..98.69 சதவீத படிவங்கள் டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மதுரையில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டல்...மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்...

Tags:    

மேலும் செய்திகள்