நடிகர் விவேக் மரணம்-விசாரணைக்கு ஏற்பு

நடிகர் விவேக் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரிய மனுவை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Update: 2021-08-25 09:35 GMT
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் விவேக் கொரோனா தடுப்பூசி  செலுத்தி இருந்த நிலையில், அவரது மரணத்தில் சர்ச்சை எழுந்த‌து. ஆனால் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் அல்ல என சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்