ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-07-28 11:13 GMT
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தேனி மாவட்டம்  போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

அதேபோல், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் மனு தாக்கல் செய்தார். 

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, பன்னீர் செல்வத்துக்கு எதிரான வழக்கில், சொத்து மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வைப்புத் தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்