20% சிறப்பு ஒதுக்கீடு - இந்த ஆண்டு முதல் அமல்

அரசு பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குள் வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-27 00:36 GMT
அரசு பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குள் வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசுப்பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையை திருத்தி அமைக்க  சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்ட பேரவையில்  தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையத்துடன் கலந்து ஆலோசித்து சிறப்பு ஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இது மட்டுமின்றி இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தபட்ட பிரிவினருக்கான புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்