அதிமுக பொதுக்குழு கூட்டம் வழக்கு - பதிலளிக்க சசிகலாவிற்கு அவகாசம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் அளிக்க, சசிகலாவுக்கு அவகாசம் வழங்கி, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-20 12:42 GMT
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் அளிக்க, சசிகலாவுக்கு அவகாசம் வழங்கி, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சசிகலா சிறையில் இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில்  நடைபெற்றது. 

அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும்  தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அதிமுகவின்  பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. 

இந்த வழக்கில் பதில் அளிக்க சசிகலாவுக்கு அவகாசம் வழங்கிய சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்