பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி
பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி;
பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி
தந்தி தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் எதிரொலியாக நீலகிரியை சேர்ந்த பழங்குடியின மாணவிகளின் படிப்பு செலவிற்கு உதவ ஐந்து தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர்.முதுமலை வனப்பகுதியின் நடுவே உள்ள அடிப்படை வசதிகள் இல்லாத பெண்ணை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் 6 பேர் முதன் முதலாக 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இது குறித்த செய்தி கடந்த 7ம் தேதி தந்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. அதனை பார்த்த கோவை, திருப்பூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த சிவராஜ், காமராஜ், ஆனந்த், மோகன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் படிக்க செல்லும் மாணவிகளுக்கு உதவ முன் வந்துள்ளனர். முதற்கட்டமாக தன்னார்வலர்கள் ஐந்து பேரும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உடைகள், காலணிகள், நோட்டு புத்தகங்களை வாங்கி வந்து மாணவிகளுக்கு கொடுத்தனர். தொடர்ந்து மாணவிகளின் உயர் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.