கொரோனாவிற்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு.. நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் பலி

நெல்லை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த, 40 வயது பெண், மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2021-05-30 11:01 GMT
கொரோனாவிற்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு.. நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் பலி 

நெல்லை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த, 40 வயது பெண், மாரடைப்பால் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கம்மாளப்பட்டியைச் சேர்ந்த 40 வயது பெண், கொரோனா பாதிப்பு காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கண்ணில் ஏற்பட்ட வலியால்,சோதனை செய்தபோது, கருப்பு பூஜை இருப்பது தெரிய வந்தது. அது தொடர்பாக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.கருப்பு பூஞ்சை நோய், பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென சுகாதாரத்துறை உத்தரவிட்டதன் பேரில், கடந்த19-ஆம் தேதி, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால், உயிரிழந்தார். இதுவரை கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட 4 பேர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
 
Tags:    

மேலும் செய்திகள்