வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு : இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

Update: 2021-03-09 12:20 GMT
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லை சேர்ந்த  விஜயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  தேர்தல் அறிவிப்புக்கு அரை மணி நேரம் முன்பு அரசியல் காரணங்களுக்காக இந்த   சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக  மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.  இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்து  பட்டியலிட உத்தரவிட்ட  தலைமை நீதிபதி அமர்வு விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்