காதலர் தினம் : வெளிநாட்டு ஆர்டர்கள் வரவில்லை - கவலையில் வாடும் ரோஜா விவசாயிகள்
காதலர்தின கொண்டாங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஒசூர் பகுதி ரோஜாமலர் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.இதுபற்றி பார்க்கலாம்...
காதலர்தின கொண்டாங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஒசூர் பகுதி ரோஜாமலர் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.இதுபற்றி பார்க்கலாம்...
காதலர் தினம் என்றவுடன் சட்டென்று நம் நினைவுக்கு வருவது, வாழ்த்து அட்டைகளும், ரோஜாப் பூக்களும் தான்.ரோஜாப் பூக்களையும், காதலர் தினத்தையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது.காதலர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பயிரிடப்படும் ரோஜாப்பூக்கள் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வாடிக்கை.செழிப்பான மண்வளத்தையும், சீரான தட்ப வெப்பநிலையையும் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் கொண்டுள்ளதால் அங்கு, சாகுபடி செய்யப்படும் ரோஜாக்களுக்கு எப்போதும் மவுசு அதிகம்.காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டுவரை, நிலைமை இப்படி இருந்த நிலையில், இந்த ஆண்டு, கொரோனாவால் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.இந்த ஆண்டு காதலர் தின கொண்டாங்களுக்காக வெளிநாட்டு ஆர்டர்கள் இதுவரை வரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர் ரோஜா சாகுபடி விவசாயிகள்.ரோஜா விவசாயத்தை நம்பி ஒசூர் பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் உள்ளனர். ஆர்டர்கள் வராமல் போனதால், ரோஜா விவசாயிகளை, காதலர் தினம் கைவிரித்து கவலையில் வாடச் செய்துள்ளது.