நபிகள் நாயகம் பற்றி அவதூறு பேச்சு - பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது

பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-02-01 09:47 GMT
பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கலந்த 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலுக்கு தரும் விதமாக பா.ஜ.க. சார்பில் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் கூட்டுறவு காலனியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன், இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 
அப்போது, மர்ம நபர்கள் சிலர் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீசார் தடுத்து நிறுத்தி மர்ம நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்பை சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக பா.ஜக. பிரமுகர் கல்யாணராமனை கைது செய்ய கோரி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்