4 மாத மின்நுகர்வு மொத்தமாக கணக்கீடு - தமிழக அரசுக்கு எதிராக மேல்முறையீடு

தமிழகத்தில் 4 மாத மின்சார பயன்பாட்டுக்கு மொத்தமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2021-01-20 14:26 GMT
கொரோனா ஊரடங்கில் 4 மாத மின்சார பயன்பாட்டு அளவை மொத்தமாக கணக்கிட்டதால் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது 2 மாதங்களாக பிரித்து கணக்கிட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி கேட்டுக்கொண்டார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனு குறித்த விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோர தனித்தனியாக அணுகுமாறு அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்