திமுக அரசியல் செய்ததால் தான் மருத்துவ கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்றது - ஸ்டாலின்

திமுக அரசியல் செய்ததால் தான் மருத்துவ கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்று இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-21 18:27 GMT
சேலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் பொது கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்று காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு  பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தி.மு.க. ஏற்கும் என்று தாம் அறிவித்ததை குறிப்பிட்டார்.  உடனே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்தார் என்றும் இதற்கு   நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஸ்டாலின் கூறினார். தி.மு.க. அரசியல் செய்கிறது என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார் என்றும் அரசியல் செய்ததால் தான் மருத்துவ கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்று இருக்கிறது என்றும் ஸ்டாலின் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க. தான் ஆளும்கட்சியாக செயல்படுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். 
உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு தடை விதித்து, கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், தி.மு.க. என்ற தேன்கூட்டில் கை வைக்க வேண்டம் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்