"பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு" - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

Update: 2020-09-07 09:35 GMT
அதில், 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பள்ளி சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகாத நிலையில், 2006ம் ஆண்டு முதல் படிப்படியாக  பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு முதல், குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. 2012ம் ஆண்டு 292 புகார்களும் , 2013-ல் 419 புகார்கள்,  2014-ல் ஆயிரத்து 55 புகார்களும் பதியப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஆயிரத்து 546 புகார்களும்,  2016-ல் ஆயிரத்து 585 புகார்களும், 2018-ல் 2 ஆயிரத்து 52 பாலியல் குற்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு 2ஆயிரத்து 410 பாலியல் குற்ற சம்பவங்கள் பள்ளி மாணவர்களுக்கு எதிராக நடந்திருப்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகி இருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்