இன்று சர்வதேச யானைகள் தினம் - வனம் காக்கும் யானையை காக்க கோரிக்கை

நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய விலங்கு... கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது.

Update: 2020-08-12 14:04 GMT
இன்று சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், யானைகள் குறித்து ஒரு செய்தி தொகுப்பு.....

இறைவன் படைத்த அழகிய, அற்புத படைப்புகளில் ஒன்று யானை...

நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய விலங்கு... கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. 90 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை உடையது. நல்ல ஞாபக சக்தியை கொண்டது. வனத்தை காப்பது... என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு விலங்கு யானை.

மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியிலும், அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் யானைகள் அதிகளவு காணப்படுகின்றன. யானைகள் தினசரி 200 முதல் 250 கிலோ வரை உணவுகளை உட்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதில் விதைகளும் அடங்கும்... இதனால் யானைகளின் சாணத்தோடு பல்வேறு வகையான விதைகளும் பரவும். இது வனத்தின் பரப்பளவை அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது.

யானைகள் இருக்கும் வழித்தடத்தில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு அதிகமாகி வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது... நீண்ட காலம் பயன்படுத்திய வழித்தடத்தில் இடையூறு ஏற்படுவதால், அவை மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளில் நுழைகிறது.. இதனால் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் மோதல்களும் உருவாகின்றன. மோதல்களின் விளைவாக யானைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து அழிந்துவிட கூடிய அபாய சூழ்நிலை உருவாகும். வனத்தை பாதுகாக்கும் யானைகளை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்